அகரம் கலைக்கூடம்
ஆற்றும் கலைச்சேவை
சிகரம் தொட வாழ்த்துகிறேன் வாழி வாழி.
மிருதங்க ஆசிரியர்
கலைகள் மனித வாழ்வியலில் நீக்கமுற நிறைந்திருப்பவை. இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழையும் இளந்தலைமுறையினா்பயில்வதற்கு களம் அமைத்துக் கொடுக்கின்ற திருகோணமலை
அகரம் மக்கள் கலைக்கூடம் ஆலமரம் போல் விரிவடைந்து கவின் கலைக்கல்லூரியாக வளர்ச்சியுற்று சிகரம் தொடுவதற்கு ஒரு மாணவனாக எனது நல்வாழ்த்துக்களைத்தெரிவித்துக்கொள்கின்றேன்.
சிரேஸ்ட கலாசார உத்தியோகத்தர்
பண்பாட்டலுவல்கள் திணைக்களம்
கிழக்கு மாகாணம்.
அகரம் மக்கள் கலைக்கூடம் மேற்கொண்டுவரும் பணிகள் மிக பெறுமதி மிக்கவையென நன்புகிறேன்.
பாரம்பரிய கலைகளை வளர்த்தெடுக்கவும், மேம்படுத்தவும் ஆற்றி வரும் பணிகள் புதிய பரம்பரையினருக்கு அவசியமானது.அந்த வகையில் நவராத்திரி தினத்தில் அகரம் மக்கள் கலைக்கூடத்துக்கான இணைய தளம் ஆரம்பிக்கப்படும் முயற்சி காலத்துக்குரியது.
அதற்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
முன்னாள் தலைவர்
பலநோக்கு கூட்டுறவு சங்கம்
திருகோணமலை