Akaram Makkal Kalaikoodam

வயலின்

வயலின் என்ற நரம்பிசைக் கருவி, இந்தியாவில் தோன்றியது

வயலின் என்ற நரம்பிசைக் கருவி, இந்தியாவில் தோன்றியது. பின், மேலை நாடுகளுக்குப் பரவியது. அங்குள்ள அறிஞர்கள் பல மாற்றங்கள் செய்தனர். மாற்றங்களுடன் வந்த வயலின் கருவியை, இந்திய கலைஞர்கள், இசைக் கச்சேரிகளில் பயன்படுத்து கின்றனர். வயலின் என்ற நரம்பிசைக் கருவி, இந்தியாவில் தோன்றியது. பின், மேலை நாடுகளுக்குப் பரவியது. அங்குள்ள அறிஞர்கள் பல மாற்றங்கள் செய்தனர். மாற்றங்களுடன் வந்த வயலின் கருவியை, இந்திய கலைஞர்கள், இசைக் கச்சேரிகளில் பயன்படுத்து கின்றனர்.

வரலாறு

அக்காலத்திலே வயலின் போன்ற இசைக்கருவி பயன்படுத்தப்பட்டதற்கு சான்று இது.

ஐரோப்பிய நாடான இத்தாலியைச் சேர்ந்த ஸ்ட்ராடிவரிஸ் என்பவர், இப்போது புழக்கத்தில் உள்ளது போன்ற வயலினை உருவாக்கினார். சில்வர் ஓக், பைன், மேப்பிள் போன்ற மரங்களில் வயலின் இசைக்கருவி செய்யப்படுகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த பால ஸ்வாமி தீட்சிதர், ஐரோப்பியர் வடிவமைத்த வயலினை, 1821ல் இசைக்க பயின்றார். அதில் கர்நாடக இசையை நிகழ்த்திக் காட்டினார். வயலினில் இருந்து பல புதுக்கருவிகள் தோன்றியுள்ளன.

ஆய்வுகள்

இக்காலத்தில் நாம் பயன்படுத்தும் வயலின் ஐரோப்பியர்களால் 16ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. ஸ்ட்ராடிவேரியஸ் (Stradivarius) என்னும் இத்தாலியர் இதனை உருவாக்கினார். இத்தாலியில், பதினாராம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்த கருவி கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்கிறார்கள். இது ரெபெக் (Rebec) எனப்படும் ஒரு பழம்பெறும் இசைக்கருவியில் இருந்து மறுவியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. வயலினை பற்றிய குறிப்பும் அதை வாசிக்க தேவையான வழிமுறைகளும் "Epitome Musical” எனப்படும் ஒரு இசை கையேட்டில் 1556-லேயே குறிப்பிடப்பட்டுள்ளது.[1] அந்த நேரத்தில் வயலின் இசைக்கருவியின் புகழ் இத்தாலியில் இருந்து ஐரோப்பா கண்டம் முழுவதிலும் பரவி இருந்தது . ரோட்டில் வசிக்கும் சாதாரண இசைக்கலைஞரில் இருந்து மன்னரின் சபையில் வாசிக்கும் வித்துவான்கள் வரை எல்லோரின் கையிலும் வயலின் இடம் பெற்றிருந்தது.

வரலாற்று குறிப்புகளில் கூட பிரென்சு மன்னன் ஒன்பதாவது சார்லஸ் 1560-இல் 24 வயலின்கள் செயவதற்கு ஆணையிட்டதாக உள்ளது. பதினெட்டாம் நூற்றாண்டில் தான் வயலினின் வடிவமைப்பில் பல மாறுதல்கள் ஏற்பட்டன. வயலினின் கழுத்துப்பகுதி நீட்டமாகவும், அதன் கோணத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. இன்றளவிலும் இந்த கால நேரத்தில் செய்யப்பட்ட வயலின்கள்தான் கலைக்கூடங்களிலிலும் ,கலை பொருட்கள் சேகரிப்பாளர்களிடமும் பெரும் மதிப்பை பெற்றவையாக இருக்கின்றன. நம் இந்தியாவில் இந்த இசைக்கருவி பாலுச்சாமி தீஷிதர் என்பவரால் தென்னிந்திய இசைத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது .

சொல் பிறப்பு

தென்னிந்திய இசை முறைமையான கருநாடக இசையில், வயலின் தற்போது முக்கியமான கருவியாகப் பயன்படுகின்றது. இங்கு இது பாலசுவாமி தீட்சிதர் (1786 - 1858) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டதாக நம்பப்படுகின்றது. இவர் 1824 இல் எட்டயபுரம் சமஸ்தான வித்துவானாக இருந்தவர். கர்நாடக இசைக்கருவிகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று பண்ணிசைக் கருவிகள் (melodic instruments). மற்றொன்று தாளக் கருவிகள் (percussion instruments). ஆகும். குரலுக்கு இணையாக இராகங்களையும், மெட்டுகளையும் (tunes) இசைக்கக்கூடிய கருவிகள் பண்ணிசைக் கருவிகள், புல்லாங்குழல், நாகசுரம், வீணை, வயலின் ஆகியவை பண்ணிசைக் கருவிகள். மண்டலின், கிளாரினெட், சக்ஸோபோன் ஆகிய மேலைநாட்டுக் கருவிகளும் தற்காலத்தில் கருநாடக இசையைத் தருகின்றன. தாளத்தின் நுட்பங்களை இசை, லய நயத்துடன் வாசிக்கும் கருவிகள் தாளக்கருவிகள். கருநாடக இசையில் முதன்மையான தாளக் கருவி மிருதங்கம். தவில் என்னும் கருவி நாகசுர இசையோடு இணைந்த ஒரு தாளக் கருவியாகும். வயலின் ஒரு நரம்புக் கருவி (stringed instrument). மேலைநாட்டு இசைக்கருவி. கி.பி. 19 ஆம் நூற்றாண்டிலிருந்து கருநாடக இசையில் வயலின் ஒரு இன்றியமையாத கருவியாக உள்ளது. குரலிசைக்கு ஒப்ப எல்லா இசை நுணுக்கங்களையும் வயலினில் இசைக்கலாம். கர்நாடக இசையில் தனி நிகழ்ச்சி நிலையில் (solo concert) நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. பக்க இசை நிலையிலும் (accompanying instrument) இன்றியமையாத இடத்தைப் பெற்றுள்ளது .

இலக்கியக் குறிப்புகள்

கருநாடக இசை நிகழ்ச்சிகளில் வயலின் வாசிப்பவர், மேடையின் தரையில் அமர்ந்து அல்லது கதிரையில் ஒருகால் மேல் மறு கால் போட்டு வாசிக்கின்றனர். வாசிக்கும் போது வலது காலை முன்னிறுத்தி அதனில் வயலினைத் தாங்குவர். இடதுகால் உள்ளே மடக்கப்பட்டிருக்கும். மேலைத்தேய சங்கீதத்தில் நின்று கொண்டும், இருந்துகொண்டும் வயலின் வாசிக்கப்படும். வயலினின் மேல் இடது பக்கத்தை நாடியினால் அழுத்திப் பிடித்தபடி வயலின் மேலைத்தேய சங்கீதத்தில் வாசிக்கப்படுகின்றது.

இது ஒரு மேல்நாட்டு நரம்பிசைக்கருவி. மிடற்றிசையைப் பிடில் கருவியில் இசைக்கலாம் . மேல்நாட்டு இசைக்கருவியாக இருந்தாலும் , இசை இயக்கம் பெறுவதில் மிகக்கடினமாயினும் ஏனைய இசைக்கருவிகளைவிட இதில் வாய்ப்பாட்டு நன்றாய் அமைக்கமுடியும்.