Akaram Makkal Kalaikoodam

யோகா

யோகக் கலை அல்லது யோகா

யோகக் கலை அல்லது யோகா (ஆங்கிலம்: yóga, சமஸ்கிருதம், பாலி: योग|योग) என்பது உடல், மனம், அறிவு, உணர்வு மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும், சமன்பாட்டிற்கும் உதவிடும் கலை ஆகும். யோகா என்னும் கலை வாழ்க்கை அறிவியல் மற்றும் வாழும் கலை ஆகும். பதஞ்சலி முனிவரால் இக்கலை இந்தியாவில் தோன்றி வளர்ந்து வழிவழியாய் வரும் ஓர் ஒழுக்க நெறியாகும். இது உடலையும் உள்ளத்தையும் நலத்துடன் வைத்துப் போற்றும் ஒழுக்கங்களைப் பற்றிய நெறி.

யோகாவின் பல்வேறு மரபுகள் இந்து, புத்த மற்றும் சமண மதங்களில் காணப்படுகின்றன. மேலும் யோகா வஜ்ரயான மற்றும் ​​திபெத்திய புத்த மத தத்துவங்களில் ஒரு முக்கிய பகுதியாக விளங்குகிறது.

வரலாறு

யோகம் என்ற சொல்லுக்கு இணைதல் அல்லது இணக்கமாக இருத்தல் என்று பொருள். யோகம் என்பது இந்தியாவில் உள்ள ஆறு தத்துவமுறைகளில் முக்கியமான ஒன்றாகும். யோகாவின் தோற்றம் விவாதத்திற்கு உட்பட்டு இருக்கின்றது. இது வேத காலத்திற்கு முன்பே தோன்றி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

சிந்து சமவெளி நாகரிகத்தின் தளங்களில் உள்ள சில முத்திரைகள் ஒரு பொதுவான யோகா அல்லது தியான நிலைகளை புள்ளிவிவரங்கள் காட்டி சித்தரிக்கின்றன. இந்து தத்துவத்தின் படி யோகம் என்பது சீவாத்மா, பரமாத்மாவுடன் இணைதலுக்கான வழி எனப்படுகிறது. யோகத்தின் பாதையில் செல்பவர் யோகி எனப்படுகிறார்.

ஆய்வுகள்

நோன்பியர் எனப்படும் தவ முனிவர்கள் கைகளை ஊன்றிக்கொண்டு இருக்கையில் அமர்ந்திருந்தது பற்றி நற்றிணைப் பாடல் ஒன்று குறிப்பிடுகிறது. இதனை அது கையூண் இருக்கை என்று குறிப்பிடுகிறது [10] தினைப்புனத்தில் விளைந்திருக்கும் தினைக் கதிரைக் கிள்ளிச் சென்ற குரங்கு ஒன்று அதிலுள்ள தினைகளைக் கைகளால் ஞெமிடி வாயில் அடக்கிக்கொண்டிருந்த காட்சி நோன்பியர் கையூண் இருக்கை போல் இருந்ததாம். இதனை உயிர்ப்புப் பயிற்சி எனக் கருதலாம்.

சொல் பிறப்பு

15 ஆம் நூற்றாண்டு இந்தியாவில் வாழ்ந்த யோகி ஸ்வாத்மராமா, தன் ஹத யோக பிரதிபிகா தொகுப்பில், ஹத யோகா என்ற குறிப்பிட்ட வகை யோகாவைப் பற்றி விளக்கியுள்ளார். பதஞ்சலியின் ராஜ யோகத்தில் இருந்து, ஹத யோகா கருத்தில் மாறுபட்டுள்ளது, அது சத்கர்மாவை குறியாகக் கொண்டு, உடல் சுத்தம் மனத் தூய்மைக்கு (ஹா) மற்றும் ப்ராண அல்லது இன்றியமையாத சக்தி (தா) பெற வழி நடத்திச் செல்லும் என்கிறது.

மேலும் பதஞ்சலியின் ராஜ யோக முறையில், அமர்ந்து செய்யும் ஆசனத்தோடு அல்லது உட்கார்ந்து செய்யும் தியான நிலையை ஒப்பிடுகையில், இது இன்று பிரபலமாக வழக்கத்தில் இருக்கும் முழு உடல் நிலைகளின் ஆசனங்களின் வளர்ச்சியைக் குறிக்கிறது. ஹத யோகா தன் நவீன மாற்றங்களைக் கொண்ட நடையில் பல வகைகளைத் தான் மக்கள் இன்று யோகா என்ற பதத்தோடு சம்பந்தப்படுத்துகிறார்கள்.

இலக்கியக் குறிப்புகள்

யோகாவின் குறிக்கோள் ஆரோக்கியத்தை முன்னேற்றுவதில் தொடங்கி, மோட்சத்தை அடைவது வரை பல வகைப்படும். சமண மதத்திலும் மற்றும் தனித்த அத்வைத வேதாந்தப் பள்ளிகளில் மற்றும் சைவசமயத்திலும் யோகாவின் குறிக்கோள் மோட்சம்.அதாவது உலகியல் துன்பங்களில் இருந்து, பிறப்பு, இறப்பு (சம்சாரம்) என்ற சுழற்சியில் இருந்து விடுதலை, இந்தக் கட்டத்தில் மிக உயர்ந்த பிரம்மத்தில் ஐக்கியம் என்ற கருத்து. மஹாபாரத்தத்தில், யோகாவின் லட்சியம் பலவிதமாக பிரம்ம லோகத்தில் பிரம்மனாக நுழைவது, அல்லது எல்லாவற்றிலும் உள்ள பிரம்மம் அல்லது ஆத்மாவை உணர்தல் என்று பலவாறாக விளக்கப்பட்டுள்ளது .

பக்தி பள்ளிகளான வைணவம் , பக்தி அல்லது ஸ்வயம் பகவானுக்கான சேவை/கைங்கரியம் செய்வது யோகாவின் முறைகளின் ஆணித்தரமான / இறுதியான இலக்கு. இங்கு இலக்கு என்பது முடிவில்லாத ஒரு தொடர்பை பகவான் விஷ்ணுவுடன் அனுபவிப்பதாகும். உங்கள் உடல் உங்களுடன் ஒரு நிரந்தர/ நிலையான உறவை பேணி வர வேண்டும் , எப்படி என்றால் ஒரு அமைதியான , நடுநிலையான மனஅமைதி பெற்று விளங்கவேண்டும் என்பதே!.