இலங்கை தேசிய சிலம்பாட்ட சம்மேளனத்தின் பயிற்சியாளர்களால் கடந்த 2ம் 3ம் திகதிகளில் அகரம் மக்கள் கலைக்கூடத்தில் பயிற்சிகள் நடைபெற்றது.
அகரம் மக்கள் கலைக்கூடத்தினால் ஒழுங்மைக்கப்பட்டு இலங்கை தேசிய சிலம்பாட்ட சம்மேளனத்தின் பயிற்சியாளர்களால் கடந்த 2ம் 3ம் திகதிகளில் அகரம் மக்கள் கலைக்கூடத்தில் பயிற்சிகள் நடைபெற்றது.
எமது 46 சிலம்பாட்ட மாணவர்கள் இப்பயிற்சிநெறியில் பங்கேற்றனர்.
இப்பயிற்சி நெறியின் தலைமை பயிற்றுவிப்பாளராக திரு ரா திவாகரன், உதவித் தலைவர், உலக சிலம்பாட்ட சம்மேளனம் அவர்களும் உதவிப்பயிற்சியாளராக திரு பு கிஷோக்குமார் அவர்களும் கலந்துகொண்டு எமது சிலம்பாட்ட மாணவர்களுக்கான பயிற்சியினை சிறப்புற வழங்கியிருந்தனர். அவர்களுக்கு எமது நன்றிகளும் வாழ்த்துகளும்.
இப் இப்பயிற்சிமுகாமினை எமது அகரம் மக்கள் கலைக்கூடத்தின் பிரதம குரு ராஜானந் அவர்கள் நெறிப்படுத்தியிருந்தார்.
இப்பயிற்சி நெறிக்கு Gowridhasan Vibulananthan அவர்கள் தனது கராத்தே பாடசாலை ஊடாக இணை அனுசரணை வழங்கியிருந்தார். அவர்களுக்கு எமது நன்றிகள்.
இப்பயிற்சிமுகாமினை இணைப்பாளர்கள் யோகச்சந்திரன் மற்றும் வினோ ஆகியோர் ஒருங்கமைத்திருந்தனர்.
இப்பயிற்சி நெறியில் கலந்து பயிற்சி பெற்ற மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும். எமது அலுவலக உத்தியோகத்தருக்கும் எமது நன்றிகள்.