உலக ஐக்கிய சிலம்ப சம்மேளனத்தின் ஒழுங்கமைப்பில் இராண்டாவது முறையாக கொழும்பு றோயல் மாஸ் அரேனா அரங்கில் வெகு பிரமாண்டமாக இடம்பெற்ற தெற்காசிய சிலம்ப போட்டிகளின் முடிவில் அகரம் மக்கள் கலைக்கூட கல்லூரி மாணவர்கள் பன்னிரண்டு (12) தங்கம், பன்னிரண்டு (12) வெள்ளி, ஆறு (6) வெண்கலம் உள்ளடங்கலாக முப்பது (30) பதக்கங்களை சுவீகரித்துக் கொண்டுள்ளனர். மாணவர்களும் அவர்கள் பெற்ற பதக்கங்களின் விபரமும்
தொடு சிலம்பம் பிரிவு
லி.டிவாகரன் - 1ம் இடம் தங்கப்பதக்கம்
ரூ.பிருந்துஷன் – 1ம் இடம் தங்கப்பதக்கம்
உ.பவிகாஷ் – 1ம் இடம் தங்கப்பதக்கம்
அ.ஹர்ணிகா - 1ம் இடம் தங்கப்பதக்கம்
சு.சுபீட்சகன் - 2ம் இடம் வெள்ளிப்பதக்கம்
ச.கோபிகா – 2ம் இடம் வெள்ளிப்பதக்கம்
ச.சந்தோஷ் – 2ம் இடம் வெள்ளிப்பதக்கம்
வி.கேஷிகன் - 2ம் இடம் வெள்ளிப்பதக்கம்
கு.தருஷன் - 3ம் இடம் வெண்கலப்பதக்கம்
ர.ஷாம் டேவிட் – 3ம் இடம் வெண்கலப்பதக்கம்
ஒற்றைச் சிலம்பம் பிரிவு
ரூ.பிருந்துஷன் – 1ம் இடம் தங்கப்பதக்கம்
சு.சுபீட்சகன் -1ம் இடம் தங்கப்பதக்கம்
ச.கோபிகா - 1ம் இடம் தங்கப்பதக்கம்
வி.கேஷிகன் - 2ம் இடம் வெள்ளி பதக்கம்
ர.ஷாம் டேவிட் – 2ம் இடம் வெள்ளிப்பதக்கம்
அ.ஹர்ணிகா - 2ம் இடம் வெள்ளிப்பதக்கம்
உ.பவிகாஷ் - 2ம் இடம் வெள்ளிப்பதக்கம்
லி.டிவாகரன் – 3ம் இடம் வெண்கலப்பதக்கம்
கு.தருஷன் – 3ம் இடம் வெண்கலப்பதக்கம்
ச.சந்தோஷ் – 3ம் இடம் வெண்கலப்பதக்கம்
வேல் கம்பு பிரிவு
வி.லுகேஷிகன் – 1ம் இடம் தங்கப்பதக்கம்
ச.சந்தோஷ் – 1ம் இடம் தங்கப்பதக்கம்
சு.சுபீட்சகன் -1ம் இடம் தங்கப்பதக்கம்
ச.கோபிகா - 1ம் இடம் தங்கப்பதக்கம்
ர.ஷாம் டேவிட் – 1ம் இடம் தங்கப்பதக்கம்
ரூ.பிருந்துஷன் – 2ம் இடம் வெள்ளிப்பதக்கம்
உ.பவிகாஷ் – 2ம் இடம் வெள்ளிப்பதக்கம்
அ.ஹர்ணிகா – 2ம் இடம் வெள்ளிப்பதக்கம்
லி.டிவாகரன் – 2ம் இடம் வெள்ளிப்பதக்கம்
கு.தருஷன் – 3ம் இடம் வெண்கலப்பதக்கம்
அகரம் மக்கள் கலைக்கூடமானது அருகி வருகின்ற தமிழர் கலை, கலாச்சார, பண்பாட்டு பாரம்பரியங்களை திருகோணமலை மண்ணில் அடுத்த சந்ததிகளுக்கு திரிபுகளின்றி கொண்டு போய் சேர்க்கும் நோக்குடன் கலைக்கூடமாக நிறுவப்பட்டு எம்மவர் பாரம்பரிய கலை சார் கற்கை நெறிகளை ஒரே கூரையின் கீழ் வழங்கி வருகிறது. அந்த வகையில் இம்முறை இடம்பெற்ற தெற்காசிய சிலம்ப போட்டிகளில் சிலம்பாட்ட ஆசான் ராஜ ஆனந்த் அவர்களின் நெறியாள்கையில் பதினொரு மாணவர்கள் அகரம் மக்கள் கலைக்கூடம் பங்கேற்று பதக்கங்களை வென்று நம் மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.