Akaram Makkal Kalaikoodam

தைப்பொங்கல்

தைப்பொங்கல் தமிழர் திருநாளாகும். உழவர் திருநாள் என்றும் இதை அழைப்பர். ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்று பொதுவாகப் பெரியோர் சொல்வார்கள். ஆங்கில நாட்காட்டியின்படி தைமாதம் 14 ஆம் திகதி அல்லது 15 ஆம் திகதியில் தைப்பொங்கல் வரும். அதுவே தமிழ் நாட்காட்டியில் தைமாதம் முதலாம் திகதியாகும். இந்தியா, இலங்கை, கனடா, சிங்கப்பூர், மலேசியா, தென்னாபிரிக்கா, மொரிசஸ் மற்றும் தமிழர்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழர்களால் தைப்பொங்கல் திருநாள் கொண்டாடப் படுகின்றது.

ஆதிகாலத்தில் விவசாயமே தமிழர்களின் முதன்மைத் தொழிலாக இருந்தது. தமிழர்கள் விவசாயிகளாக இருந்ததால் இயற்கை சார்ந்த பூமித்தாய்க்கும், சூரியனுக்கும், மற்றும் தங்கள் விவசாயத்திற்கு உதவியாக இருந்த மாடுகளுக்கும் நன்றி சொல்லும் நாளாகத் தைப்பொங்கலைத் தொன்று தொட்டுக் கொண்டாடி வருகின்றனர். சூரியன் மகரராசிக்குச் செல்லும் தினமே தைப்பொங்கல் தினமாகும். தைப்பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல், அல்லது பட்டிப் பொங்கல் என்று சொல்லி, உழவர்களுக்குத் துணையாக இருந்த மாடுகளுக்குப் பொங்கிப்படைப்பர்.

இலங்கையில் பொதுவாக 2 நாட்களும், புலம்பெயர்ந்த நாடுகளில் கால்நடைகளை வீட்டில் வளர்க்க முடியாது என்பதால் ஒரு நாள் பொங்கலை மட்டும் கொண்டாடுவார்கள், தமிழ் நாட்டில் சில இடங்களில் போகிப்பண்டிகை, தைப்பொங்கல், பட்டிப்பொங்கல், காணும் பொங்கல் என்று நான்கு நாட்களும் கொண்டாடுகிறார்கள். போக்கி என்ற சொல்தான் மருவி போகி என்றாகியது. போகிப்பண்டிகைக்காகப் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பது போல, வீடு, வளவுகளைச் சுத்தம் செய்வர். தமிழ் நாட்டின் சில இடங்களில் ஜல்லிக்கட்டு, வழுக்கு மரம் ஏறுதல், உரி அடித்தல் போன்ற பல விதமான விளையாட்டுப் போட்டிகள் இத்தினங்களில் இடம் பெறுகின்றன.

இந்நிகழ்வில் பிரதமவிருந்தினராக மிருதங்க வித்துவானும் எமது ஆலோசகருமான திரு சி காண்டீபன் கலந்துகொண்டு கட்டடத்தினை திறந்துவைத்தார். சிறப்புவிருந்தினர்களாக திரு சதீஸன், திரு சிவநாதன், அதிபர் திருமலை திரு நவம், திரு ரகுராம், திரு ஆனந்தரமணன். ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.