Akaram Makkal Kalaikoodam

முதலாவது ஆண்டிறுதி கொண்டாட்டம் 23.12.2023

அகரம் மக்கள் கலைக்கூடத்தின் முதலாவது ஆண்டிறுதி கொண்டாட்டம் 23.12.2023 அன்று மாலை 5.45 தொடக்கம் 10.00 மணிவரை அகரத்தின் இணைப்பாளர்கள் குடும்பத்தினர், செயற்குழு உறுப்பினர்கள் குடும்பத்தினர், நலன்விரும்பிகள் குடும்பத்தினர், ஆசிரியர்கள் குடும்பத்தினர், அலுவலக உத்தியோகத்தர் குடும்பத்தினர் இணைந்து சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு இலங்கை சிலம்பாட்ட சம்மேளனத்தின் நிறுவனரும் செயலாளருமான திரு திவாகரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

நிகழ்வினை இணைப்பாளர்கள் ஒழுங்குபடுத்தி இருந்தனர்.

நிகழ்ச்சி நெறியாள்கையும் அறிவிப்பும் திருமதி அருனன் தச்ஷாலினி யும் மற்றும் விளையாட்டுகள், குழு ஒருங்கிணைப்பையும் திரு பிரகலாதன் அவர்களும் செய்திருந்தனர் அவர்கள் இருவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

நிகழ்வுக்கான போட்டோ வீடியோ விவேக்ஸன் குழுவினரும், இசைகோர்பினையும் ஒலியமைப்பினையும் TJ Entertainment குழுவினரும் விருதுகள், அழைப்பிதழ்கள், வாழ்த்து அட்டைகளை SS Digital லக்ஸ்மன் அவர்களும் செய்திருந்தனர். அனைவருக்கும் எமது நன்றிகள்.

மேலும் படங்கள் 1: https://www.facebook.com/share/p/197W1y1BJF/

மேலும் படங்கள் 2: https://www.facebook.com/share/p/18kgVcSRCt/

View More Facebook

 

View More Facebook