அகரம் மக்கள் கலைக்கூடத்தின் நவராத்திரி பூசைகளும் வாணி விழாவும் மிகச்சிறப்பாக நடந்துமுடிந்தது.
நவராத்திரி விழாவின் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு வகுப்பினை சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பொறுப்பேற்று நடாத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
வாணிவிழா.
அகரம் மக்கள் கலைக்கூடத்தின் நிர்வாக இயக்குனர் திரு யோகச்சந்திரன் அவர்கள் தலைமையில் திருமூலர் தம்பிரான் அடிகளார், இளையபட்டம், தென்கயிலை ஆதீனம் அவர்களின் ஆசியுடன் விழா நடைபெற்றது. அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.
பிரதம விருந்தினர்களாக பலநோக்கு கூட்டுறவுச்சங்கம் திருகோணமலையின் முன்னாள் தலைவர் திரு சி. நவரத்தினம் அவர்களும் உவர்மலை விவேகானந்தா கல்லூரி அதிபர் திரு சி. ரவிதாஸ் அவர்களும் கலந்துகொண்டனர்.
சிறப்பு விருந்தினர்களாக அகரம் மக்கள் மய்யத்தின் தலைவர் திரு சந்திரசேகரம், ஓய்வுபெற்ற மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் திருமதி பிரகலா மற்றும் எமது நலன்விரும்பிகளான திரு திருமதி உதயகுமார் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
கலைநிகழ்வுகள் எமது ஆசிரியர்களால் பயிற்றப்பட்டு சிறப்புடன் அறங்கேறியிருந்தது. எமது ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எமது நன்றிகள்.
நடனம் - தர்ஷினி
வயலின்- கேதாரணி
புல்லாங்குழல்- யூட்
சிலம்பம்- ராஜஆனந்த்
சகலகலா வல்லி மாலை- ஷிரீப்பிரியா
கொழுவில் வைக்கப்பட்ட சிலைகள் அனைத்தம் எமது சித்திரக்கலை ஆசிரியர் கெளதம் ரதன் அவர்களால் செய்துதரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு எமது நன்றிகள்.
வாணிவிழாவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் எமது மாணவர்களின் திறமைகளை இனம்கண்டு பரிசளிப்பதற்கு தெரிவுசெய்துதந்த கவிஞர் திரு பவித்திரன் அவர்களுக்கும் தமிழ் ஆசிரியர் திருமதி மதி அவர்களுக்கும் கலாச்சாரா உத்தியோத்தர்களுக்கும் எமது நெஞ்ஞார்ந்த நன்றிகள்.
முழுநிகழ்வுகளையும் எமது செய்குழு உறுப்பிணர் திருமதி விஜித்தா அக்கா ஒருங்கிணைத்திருந்தார். அவர்களுக்கு எமது நன்றிகள்.
மேலதிக படங்கள்: https://www.facebook.com/share/p/1DYh5t1m7P/