Akaram Makkal Kalaikoodam

Past Event

சிலம்பாட்ட வகுப்புகள்

சிலம்பாட்ட வகுப்புகள்

சிலம்பாட்ட வகுப்புகள் சிலம்பக் கலையை திருமலை மக்களிடையை கொண்டு சேர்ததில் தனக்கென தன்னிகரில்லா இடம் பிடித்துள்ளது அகரம் மக்கள் கலைக்கூடம் 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் எம்மிடம் சிலம்பம் பயின்று வருகின்றனர். வகுப்புகள் நடத்துவதோடு மட்டும் அல்லாது மாணவர்களுக்கான சிலம்பாட்ட அரங்கேற்றம், Grading exams, சிறப்பு விஷேட பயிற்சி பட்டறைகள் மேலும் நிகழ்விற்காக மேடை ஏற்றுவதற்காக வாய்ப்புக்கள் போன்ற சிறப்பம்சங்களும் அமைத்து கொடுக்கப்படுகின்றன. வயது வேறுபாடு இன்றி அனைத்து வயது பிரிவினரும் சிலம்ப கலையை கற்கும் வகையில் சிலம்பாட்ட வகுப்புகள்

சிலம்ப வகுப்பு – அன்புவழிபுரம்

சிலம்பக்கலையை திருகோணமலையில் சிலம்பக்கலையை பயிற்றுவிப்பதில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள எம் அகரம் மக்கள் கலை கூடமானது தற்போது அன்புவழிபுரம் பிரதேசத்திலும் சிலம்பம் வகுப்புக்களை ஆரம்பிக்க உள்ளது. அன்புவழிபுரம் மற்றும் அதனை அன்டிய பகுதிகளில் வசிப்பவர்கள் இந்த வகுப்புக்களில் இணைந்து கொள்ளலாம். பதிவுகள் மற்றும் மேலதிக விபரங்களுக்கு 0740005344 View More Facebook    

ஆடிப்பிறப்பு நிகழ்வு

ஆடிப்பிறப்பு நிகழ்வு அகரம் மக்கள் கலைக்கூட வளாகத்தில் 17.07.2024 அன்று மாலை 4 மணிக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் அகரம் மக்கள் கலைக்கூடத்தின் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், நண்பர்கள் என அனைவரும் வயது வேறுபாடின்றி கலந்துகொண்டனர். நிகழ்வில் அனைவருக்கும் ஆடிக்கூழ் வழங்கப்பட்டதோடு கபடி, கிளித்தட்டு, சில்லுக்கோடு, கிட்டி, பல்லாங்குழி, குண்டு அடித்தல் போன்ற எமது பாரம்பரிய விளையாட்டுகளில் அனைவரும் விளையாடி மகிழ்ந்தனர். நிகழ்வின் ஆரம்பத்தில் கலைக்கூட மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் வழங்கப்பட்டதோடு அகரம் சீருடை அறிமுகப்படுத்தப்பட்டு மாணவர்களுக்கு ஆடிப்பிறப்பு நிகழ்வு

அகரம் மக்கள் கலைக்கூடம்

அகரம் மக்கள் கலைக்கூடம் அகரம் மக்கள் கலைக்கூடம் கோணமலையின் அடையாளமாகிப்போய் அகவை ஒன்று View More Facebook    

தெற்காசிய சிலம்ப போட்டிகள்

தெற்காசிய சிலம்ப போட்டிகள் உலக ஐக்கிய சிலம்ப சம்மேளனத்தின் ஒழுங்கமைப்பில் இராண்டாவது முறையாக கொழும்பு றோயல் மாஸ் அரேனா அரங்கில் வெகு பிரமாண்டமாக இடம்பெற்ற தெற்காசிய சிலம்ப போட்டிகளின் முடிவில் அகரம் மக்கள் கலைக்கூட கல்லூரி மாணவர்கள் பன்னிரண்டு (12) தங்கம், பன்னிரண்டு (12) வெள்ளி, ஆறு (6) வெண்கலம் உள்ளடங்கலாக முப்பது (30) பதக்கங்களை சுவீகரித்துக் கொண்டுள்ளனர். மாணவர்களும் அவர்கள் பெற்ற பதக்கங்களின் விபரமும் தொடு சிலம்பம் பிரிவு லி.டிவாகரன் – 1ம் இடம் தங்கப்பதக்கம் தெற்காசிய சிலம்ப போட்டிகள்

பொழுதுபோக்கு குழுவின் சில பதிவுகள்.

பொழுதுபோக்கு குழுவின் சில பதிவுகள். அகரம் மக்கள் கலைக்கூடத்தில் மாலை வேளைகளில் சதுரங்கம், டாம், தாயம், கரம், பல்லாங்குழி. இறகுப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுகள் விளையாட்டு ஆசிரியர் மூலம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

உலக சிறுவர் தினம்

உலக சிறுவர் தினம் அகரம் மக்கள் கலைக்கூடத்தில் உலக சிறுவர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு ஒவ்வொரு சிறுவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் 90 சிறுவர்கள் பங்கேற்றனர்.

பண்ணிசை செயலமர்வு.

பண்ணிசை செயலமர்வு. பண்ணிசை செயலமர்வு. அகரம் மக்கள் கலைக்கூடத்தில் ஆவணி மாதம் 25 மற்றும் 26ம் திகதிகளில் பண்ணிசை செயலமர்வு நடைபெற்றது. இச்செயலமர்வினை திறம்பட சேவை நோக்கோடு நிவாசினி சக்திவேல், கர்நாடக சங்கீத ஆசிரியர் அவர்கள் நடத்தித்தந்திருந்தார். அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.

அகரம் மக்கள் கலைக்கூடத்தின் முதலாவது பிரிவின் சிலம்பம் அரங்கேற்ற போட்டிகளும் பரிசளிப்பு விழாவும்

அகரம் மக்கள் கலைக்கூடத்தின் முதலாவது பிரிவின் சிலம்பம் அரங்கேற்ற போட்டிகளும் பரிசளிப்பு விழாவும் அகரம் மக்கள் கலைக்கூடத்தின் முதலாவது பிரிவின் சிலம்பம் அரங்கேற்ற போட்டிகளும் பரிசளிப்பு விழாவும் 20.08.2023 அன்று திருகோணமலை பிரதான கடற்கரையின் வெலிக்கடை தியாகிகள் அரங்கிற்கு முன்னால் மிகச் சிறப்பாக நடந்தேறியது. அகரம் மக்கள் கலைக்கூடத்தின் சிலம்பாட்ட ஆசான் திரு சுகுமார் ராஜ ஆனந் அவர்களின் வழிகாட்டலில் ஆறுமாதகாலம் தொடர் பயிற்சிகளை மேற்கொண்ட 20 மாணவர்கள் தமது அரங்கேற்றத்தினை செய்திருந்தனர்.

அகரம் மக்கள் கலைக்கூடத்தினை மக்கள் மயப்படுத்தும் நோக்குடன் திருகோணமலை வலய பாடசாலைகளின் காலை ஒன்றுகூடலில் எமது கலைக்கூடம் தொடர்பான அறிமுக உரை

அகரம் மக்கள் கலைக்கூடத்தினை மக்கள் மயப்படுத்தும் நோக்குடன் திருகோணமலை வலய பாடசாலைகளின் காலை ஒன்றுகூடலில் எமது கலைக்கூடம் தொடர்பான அறிமுக உரை அகரம் மக்கள் கலைக்கூடத்தினை மக்கள் மயப்படுத்தும் நோக்குடன் திருகோணமலை வலய பாடசாலைகளின் காலை ஒன்றுகூடலில் எமது கலைக்கூடம் தொடர்பான அறிமுக உரை ஆற்றப்பட்டதோடு, மெது மாணவர்களின் கலைசார் கண்காட்சிகளும் இடம் பெற்று துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. எங்களுடைய முயற்சிகள் ஒவ்வொன்றிற்கும் திருகோணமலை வலய அதிபர்கள் மற்றும் நிர்வாகத்தினருக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.